Thipaan / 2015 மே 20 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேச தமிழ் மக்கள், மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (19) முதல் சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.
சம்பூர் பிரதேச மீள்குடியேற்றத்தை வலியுறுத்தியும் கேட்வே நிறுவனம் தமது வழக்கை விலக்கி கொள்ள வேண்டியும் கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் சாகும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பூரை சேர்ந்த பிரேம்குமாரை ஆதரிக்கும் வகையிலும் இத்தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
'சம்பூர் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இவர்கள் மேற்கொண்டிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் மிக பெறுமதியானது.
இந்த தியாகத்துக்கு தோள் கொடுக்கும் வகையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி, தமது சொந்த மண்ணில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்த வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டு காரணமாக இந்த உண்ணாவிரத்தை நடத்துகின்றனர்' என தெரிவித்தார்.
'மீள்குடியேற்றம் நடத்தப்பட வேண்டுமெனவும் லங்கா கேட்வே நிறுவனம், இந்த மக்களுடைய 9 வருட அகதி வாழ்வை கருத்திற்கொண்டு தங்களுடைய வழக்கை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்மெனவும் சாகும் வரை உண்ணா விரதத்தை மேற்கொண்டிருக்கும் சம்பூரைச் சேர்ந்த பிரேம் குமாருக்கு ஆசி வேண்டியும் இந்த உண்ணா விரதத்தை தொடங்கியுள்ளோம்' என கூறினார்.
'இவ் உண்ணாவிரதம் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இதே இடத்தில் இடம்பெறும். நாளையும்(இன்று), நாளை மறுதினமும்(நாளை) மூதூர் பிரதேசத்தில் இருக்கின்ற ஏனைய தமிழ் கிராமங்களில் இதற்கு ஆதரவாக ஆங்காங்கே உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்'.
'இதில் சம்பூர் மக்களுடன் இணைந்து அனைத்து தமிழ் மக்களும் சேர்ந்து கைகோர்த்து நிற்கின்றார்கள். தனி ஒருவரனாக பிரேம்குமார் சாவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று தெரிவித்தார்.



12 minute ago
16 minute ago
24 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
24 minute ago
49 minute ago