2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அலவாங்குத் தாக்குதலில் இளைஞன் படுகாயம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, சுமேதகம பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரின் அலவாங்குத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன், படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாகக் கோபமடைந்த, தாயின் இரண்டாவது கணவரான இவர், குறித்த இளைஞனை, இன்று ஞாயிற்றுக்கிழமை (25) அலவாங்கினால் தாக்கியதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் அதே இடத்தைச்சேர்ந்த கே.அனுர தினேஸ் (28 வயது) பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் குறித்த விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X