Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் படுகாயமடைந்த 4 பேர், புதன்கிழமை (31) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை நகரில் மின்சார நிலைய வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில்;, மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது, குறித்த முச்சக்கரவண்டி நிறுத்தாமல் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை நகரைச்; சேர்ந்த டி.ஜனனி (வயது 26), ஈ.சிவசாந்தி (வயது 24) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க, பதவிசிறிபுரப் பிரதேசத்தில் சைக்கிளொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த 2 பேர் பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பதவிசிறிபுரப் பகுதியைச் சேர்ந்தவர்களான சைக்கிளைச் செலுத்திவந்த டி.சமரவிக்ரம (வயது 76), மோட்டார் சைக்கிளைச் செலுத்திவந்த எம்.ஏ.பத்மதிலக (வயது 33) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
37 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
53 minute ago
1 hours ago