2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

காணி முரண்பாடு சம்பந்தமான கலந்துரையாடல்

Thipaan   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலள் காணி முரண்பாடு சம்பந்தமான 14 பிரச்சினைகள் இணங்காணப்பட்டு, அக்காணி பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் அது தொடர்பான அரச உயர் அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல், திருகோணமலை சர்வோதய கேட்போர் கூடத்தில், செவ்வாய்க்கிழமை (20) இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலினை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும், யுசைட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது இரண்டு மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர், நிள அளவை அதிகாரிகள், வன விலங்கு அதிகார சபை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறிப்பிட்ட காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வேண்டி காணி முரண்பாடு உள்ள இடங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரசன்னமாகி உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X