2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

காணியமைச்சர் எழுந்து சென்றதால் சபையில் சலசலப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம், வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண சபையின் 63 ஆவது அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலமையில் இன்று (22) காலை இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி திடிரென எழுந்து சென்றதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.

அம்பாறை மாவட்ட பிரதிநிதி  கலையரசன், ஏற்கெனவே நிகழ்சி நிரலில் உள்ளீர்கப்பட்டிருந்த காணிப் பிரச்சினையொன்றை முன்வைத்து உரையாற்ற முனைந்தபோது, அவரது உரையை செவிமடுக்காது சபையில் இருந்து காணி அமைச்சரான ஆரியவதி கலப்பதி எழுந்து சென்றதனால் சபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சர்கள் இவ்வாறு எழுந்து சென்றதை பலரும் கண்டித்ததுடன், இவ்வாறான வேளையில் குறித்த அமைச்சர்கள் கட்டாயம் பிரசன்னமாகவிருந்து பதிலளிக்க வேண்டும் என தவிசாளர் பணித்தார். 

இவ்வாறான சலசலப்பு சுமார் 20 நிமிடங்கள் நிலவிய நிலையில், அமைச்சர் ஆரியவதி கலப்பதி சபைக்குள் நுழைந்தார்.

இதனையடுத்து, தொட்டாச்சினிங்கி வெட்டை காணியை இழந்த 47 தமிழ் மக்களின் பிரச்சனைகள் ஆராயப்பட்டன. இவர்களுக்கான ஆவணங்கள் இருந்தும் அதனை பௌத்த துறவி ஒருவரின் தலமையிலான குழுவினர் அபகரித்து வேறு மக்களுக்கு ஆடாத்தாக வழங்கியுள்ளமையை இங்கு கலையரசன் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X