2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கேரளகஞ்சாவை பதுக்கியவருக்கு விளக்கமறியல்

Administrator   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை - கன்னியா  பிரதேசத்தில் முந்நூற்றியென்பது கிராம்  கேரளா கஞ்சாவை வைத்திருந்தவருக்கு, இம்மாதம் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்னான்டோ, நேற்று செவ்வாய்கிழமை (20)  உத்தரவிட்டார்.

கன்னியா, கிளிகுஞ்சுமலைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், வீட்டில் கேரளா கஞ்சா வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரின்  வீட்டைச் சோதனை மேற்கொண்டபோதே 380 கிராம் கேரளா கஞ்சாக்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரையும் குறித்த தினத்தன்றே திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X