Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியின் மயிலகுடாவ பகுதியில் வைத்து, கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினர் சென்ற கெப் வாகனம், இன்று புதன்கிழமை (21) விபத்துக்குள்ளானதில், பொலிஸ் கான்ஸ்டபிளொருவர்; காயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
கயான் பிரியதர்ஷன (44வயது) என்ற கான்ஸ்டபிளே காயமடைந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான வாகனம் சில்லுகள் உடைந்து இரு பக்கங்களும் திருப்ப முடியாத நிலைக்கு சேதமடைந்துள்ளது.
வீதிக்குக் குறுக்கே நின்ற யானையுடன் மோதியதிலேயே வாகனம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்த மொறவௌ பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .