2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கந்தளாயில் ஏழாயிரம் ஏக்கரில் நெற்செய்கை

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை ஏழாயிரம் ஏக்கர் மேட்டுநிலக் காணிகளில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கந்தளாய் பேராறு  விவசாயச் சங்கத் தலைவர் ஏ.ஜெயினூதீன் தெரிவித்தார்.

கந்தளாய், கோவில் கிராமம், பேராறு அணைக்கட்டு, மதரஸா நகர், இரண்டாம் கொலணி ஆகிய பகுதிகளிலேயே வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது நிலம் பண்படுத்துதல், வரம்பு அமைத்தல் உள்ளிட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நெல் விதைப்பு நடவடிக்கை முடிவடையும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X