2025 மே 05, திங்கட்கிழமை

கள்ள நோட்டுகளுடன் மூவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 செப்டெம்பர் 29 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் கள்ள நோட்டுகளுடன் மூவரை நேற்று முன்தினம் (27) இரவு கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, ஹினிதும மற்றும் அக்குரணை பகுதியைச் சேர்ந்த 22, 24, 52 வயதுடையவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 96ஆம் கட்டை பகுதியிலேயே தம்பலகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பத் பண்டார தலைமையிலான குழுவினர் இவர்களை சோதனையிட்டதாகவும், இவர்களிடமிருந்து 5000 ரூபாய்  போலி நாணயத்தாள்கள் 469 கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, விசாரணை செய்து வருவதாகவும் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X