Editorial / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர், இன்று (16) காலை உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை - நீதிமன்ற வீதி, வில்லூன்றிப் பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் (21 வயது) என்வரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணமெனப் பொலிஸ் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞனை கூரிய ஆயுதத்தால் குத்திய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்த துறைமுகப் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago