Thipaan / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை, கிண்ணியா பிரதேச சிப்பி தொழிலாளர்கள், இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தினர்.
கிண்ணியா நகரசபை மைதானத்தில் இருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம், கிண்ணியா பிரதேச செயலகம் வரை சென்றது.
கடந்த ஒரு மாத காலமாக சிப்பித் தொழிலுக்கான அனுமதி பிரதேச செயலாளரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் சிப்பித் தொழிலையே தங்களுடைய ஜீவனோபாயத் தொழிலாக நடாத்தி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
நல்லாட்சியில் பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வேதனையைத் தருகிறது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.




16 minute ago
31 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
47 minute ago
1 hours ago