2025 மே 21, புதன்கிழமை

செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்துக்கு நன்கொடை

Thipaan   / 2016 ஜூன் 01 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத் , பதுர்தீன் சியானா

இரண்டு இலட்சத்துப் பதினைந்தாயிரம் (215,000) ரூபாய் பெறுமதியான நன்கொடைப் பொருட்கள், திருகோணமலை  ரோட்டரிக் கழக அங்கத்தவர்களால், செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்துக்கு இன்று(01) கையளிக்கப்பட்டன.

சலவை இயந்திரங்கள், நீர்ப் பம்பி, குக்கர், மேசைகள், நாற்காலிகள் போன்ற பொருட்களே கையளிக்கப்பட்டன.

திருகோணமலை ஆயர் கிரிஸ்டியன் நோயல் இம்மானுவல் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, ரோட்டரி கழகத் தலைவர் கிறிஸ்டி ஐபோவிடமிருந்து பொருட்களை பாரமெடுத்து  இல்ல சகோதரிககளிடம் கையளித்தார்.

அந்த இல்லத்துக்கு குறித்த பொருட்கள் தேவை என்றும் இந்த கண்ணியமான மற்றும் அன்பான நன்கொடைக்காக ரோட்டரி கழக அங்கத்தவர்களை பாராட்டுவதாகவும் பிஷப் கிரிஸ் றியன் நோயல் இம்மானுவல் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X