Thipaan / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
13 வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை பக்கத்துக்கு கிராமமான வீரமாநகருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் இம்மாதம் 14ஆம் திகதி திகதி கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அத்தோ, பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சிறுமியின் வைத்திய பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும், குறித்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வீட்டு உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
16 minute ago
31 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
47 minute ago
1 hours ago