2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.புஹாரி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீத்தான்தட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரச் சாரதிகள் மூவரைக் கைது செய்துள்ளதோடு, உழவு இயந்திரங்கள் மூன்றையும் கைப்பற்றி மூதூர் பொலிஸில் தடுத்து வைத்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று உழவு இயந்திரச் சாரதிகளும், மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்துக்கு மாறாக, பிரிதொரு இடத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டமையினாலையே கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X