Thipaan / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.முபாரக்
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அடையாள அட்டை மற்றும் தன்னை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரங்களும் இன்றி சந்தேகத்துக்கிடமான முறையில் ஊருக்குள் உலாவித் திரிந்த நபரொருவரை, இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க, நேற்றுத் திங்கட்கிழமை (5) உத்தரவிட்டார்.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர், முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் வீடுகளை பார்த்து நடமாடியுள்ளார். இதுதொடர்பில், பிரதேச மக்கள் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை, கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
23 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago