Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், பதூர்தீன் சியானா
தோப்பூர் 58ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், வெள்ளிக்கிழமை (23) ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து அவர்களின் குறைகளை ஆராயும் 'ஒரு நாள் ஒரு கிராமம்' செயற்றிட்டத்தின் போது இப்பகுதி மக்களால், நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இப்பால நிர்மாணத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பகுதியில் பாலமொன்று இல்லாமையால் இப்பகுதி விவசாயிகள் தமது மூலப்பொருட்கள், முடிவுப்பொருட்களை கொண்டுசெல்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
இப்பால நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் உட்பட பொதுமக்களின் நீண்டகால குறைபாடு நிவர்த்திசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
22 minute ago
2 hours ago