Niroshini / 2016 மே 12 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு இலட்சம் ரூபாய் தாபரிப்பு பணத்தை செலுத்தாத நபர் ஒருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் மாதாந்தம் மூன்று பிள்ளைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் செலுத்தி நிலையில் பத்து மாதங்களாக ஒரு இலட்சம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையில் புதன்கிழமை(11) இரவு கைதுசெய்யப்பட்டார்.
கைதுசெய்யப்பட்ட நபர் இன்று (12) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago