Thipaan / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்படுகின்ற சடலங்கள், குளிரூட்டிகளில் வைக்கப்படுவதில்லையென மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, புதிய குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக, திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக உட்படுத்துகின்ற ஓரிரு சடலங்கள் மாத்திரம் குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்படுவதாகவும், ஏனைய சடலங்கள் பிரேத அறையில் வெளியில் வைக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, புதிய 08 குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
தூர இடங்களிலிருந்து சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு வரப்படுகின்ற சடலங்களையும் வெளி நாட்டவர்களுக்கு மரணங்கள் நிலவுகின்ற போது, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லத் தேவையில்லாத விதத்தில் பாதுகாத்து வைக்கக்கூடிய குளிரூட்டி வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மருந்துக் களஞ்சியசாலைகளில் மருந்துகளைச் சரியான வெப்பநிலைக்கு வைத்துக்கொள்ளும் நோக்கில் வைத்தியசாலைகளில் அனைத்து களஞ்சியசாலைகளும் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பொது மக்கள் நோயாளர்கள் பிரச்சினைகள் ஏதாவது இருப்பின் தமது அலுவலகத்துக்;கு வருகை தந்து தெரியப்படுத்த முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

23 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
38 minute ago
54 minute ago
1 hours ago