2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை -புல்மோட்டை வழித்தட பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை நகர் -புல்மோட்டைப் பிரதேச வழித்தடச் சேவையில் ஈடுபடுவதற்கு தம்மை மீண்டும் அனுமதிக்குமாறு கோரி தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இப்பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாது  திருகோணமலை பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கையில், 'திருகோணமலை  -புல்மோட்டை பிரதேசம் வரையான வழித்தடத்தில் சேவையில் ஈடுபடுவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கிழக்கு  மாகாண வீதிப் பயணிகள் தனியார் போக்குவரத்து அதிகார சபையின்  அறிவுறுத்தலுக்கு அமைய கடந்த ஒருவார காலம் திருகோணமலை நகர் -குச்சவெளிப் பிரதேசம் வரையான வழித்தடச் சேவையில் நாம் சேவையில் ஈடுபட்டோம். 30 கிலோமீற்றர் தூரம் வரையான இவ்வழித்தடச் சேவையில் ஈடுபடுவதால் எங்களுக்கு நட்டம் ஏற்படுகின்றது.

ஆகவே, 55 கிலோமீற்றர் தூரம் வரையான திருகோணமலை நகர் -புல்மோட்டைப் பிரதேச வழித்தடச் சேவையில் ஈடுபடுவதற்கு எங்களை அனுமதிக்குமாறு கோருகின்றோம்'; என்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X