Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 28 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்
தங்களின் வியாபார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு நகரசபையிடம் கோரிக்கை விடுத்து திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள் தங்களின் கடைகளை மூடி பணிப்பகிஷ்கரிப்பில் திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
இப்பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக நுகர்வோர் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வியாபாரிகள் 'யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் அமைத்துத் தரப்பட்ட சந்தை கட்டடத்தொகுதியை நகரசபை சீராகப் பராமரிப்பதில்லை என்பதுடன்இ இக்கட்டடத்தொகுயில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு கதவு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்; செய்து தரப்படவில்லை.
மேலும்இ சந்தைக் கட்டடத்தொகுதியின் சுற்றுப்புறத்தில் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதுடன்இ மழை நீர் தேங்கியுள்ளதால்; நுளம்புகளும் பெருகியுள்ளன.
தங்களின் கோரிக்கைக்கு அமைய அடிப்படை வசதிகளை நகரசபை செய்து தராத பட்சத்தில் எங்களின் பணிப்பகிஷ்கரிப்புத் தொடரும்' என்றனர்.
fathima Monday, 28 November 2016 06:55 AM
This is true.help them
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago