2025 மே 17, சனிக்கிழமை

திருடனுக்கு விளக்கமறியல்

Niroshini   / 2016 நவம்பர் 22 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணான்டோ நேற்றுத் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.                                     

திருகோணமலை - பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                        

குறித்த சந்தேக நபர் பாலையூற்று, உப்புவெளி மற்றும் சிவபுரி போன்ற பகுதிகளில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக குறித்த நபருக்கெதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் திருட்டு வழக்குகளும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (20) இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .