2025 ஜூலை 24, வியாழக்கிழமை

தமிழ் வித்தியாலயங்களுக்கு சிங்களமொழியில் வினத்தாள்கள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை வடக்குக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் நொச்சிக்குளம் தமிழ் வித்தியாலயங்களுக்கு மாகாண மட்ட பொதுப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் தனிச் சிங்களமொழியில் கிடைத்துள்ளதாக அவ்வித்தியாலயங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை மாகாண மட்ட பொதுப்பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்ட  நிலையில், திருகோணமலை வடக்குக் கல்வி வலயத்தில் 04 பாடசாலைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அதில் 03, 04, 05ஆம் ஆண்டு வகுப்புகளுக்கு   உத்தியோகபூர்வமாக 02 பாடசாலைகளுக்கு தனிச் சிங்களமொழியில்  வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தையும் கல்வித் திணைக்கள அதிகாரிகளையும் நம்பி வாழும்போது, தமிழ்ப் பாடசாலைகள் வடக்கு வலயத்தில் புறக்கணிக்கப்படுவதையும் கவனிப்பார் அற்ற நிலையை உணர்த்துவதாகவும் இந்த பரீட்சை வினாத்தாள்கள்; சுட்டிக்காட்டுவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தனிச் சிங்களமொழியில் பரீட்சை வினத்தாள்கள் அனுப்பிவைக்கப்பட்டமை  தொடர்பாக கோமரங்கடவெல வலயக் கல்வி பணியகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, கிழக்கு மாகாண கல்வி திணைக்களமே இதற்கு பொறுப்புக்;  கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .