Editorial / 2019 ஏப்ரல் 03 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், துண்டுகளாக்கப்பட்ட புத்தர் சிலை மீட்கப்பட்டதாகவும், அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில், நேற்று (02) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
புல்மோட்டை, ஜின்னா புரம், 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயதான குடும்பஸ்தர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் கபில கடுபிடியவின் வழிகாட்டலின் கீழ், போதைப்பொருள் தடுப்புப் பொலிஸ் குழுவொன்று, குறித்த நபரின் வீட்டைச் சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொண்டதாக, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.எம்.ஆர்.பண்டார தெரிவித்தார்.
இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்து புத்தர் சிலையின் 32 துண்டுகள் மீட்கப்பட்டதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட துண்டுகள் 4,890 கிராம் நிறையுடையதெனவும் அவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைக்காக, சந்தேக நபர், புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago