Niroshini / 2016 மே 16 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக்
இன, மத பிரதேசவாதங்களுக்கு அப்பாற்பட்டவான் நான் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
குச்சவெளியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பெரும்பாலும் தொகுதி முறையிலேயே நடைபெறும். இதனால் நீங்கள் மூதூர் தொகுதியிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து திருகோணமலை - சேருவில தொகுதிகளுக்கு அடிக்கடி விஜயம் செய்வது நமக்கு பயனளிக்காது என கூறினார்கள். இவர்களுக்கு மட்டுமல்ல இவ்வாறு குறுகிய மனப்பான்மை உள்ளவர்கள் அனைவரிடமும் நான் கூறும் பதில், நான் மூதூர் தொகுதிக்கு மட்டுமான நாடாளுமன்ற உறுப்பினரல்ல. முழு மாவட்டத்துக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்.
மூதூர் தொகுதி மக்களின் வாக்குகளால் மட்டும் நான் வெற்றிபெறவில்லை. மாவட்டம் முழுவதும் நான் வாக்குகேட்டு சென்றுள்ளேன். ஆகவே, அவர்களின் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது எனது கடமை. அடுத்த தேர்தலை இலக்காக கொண்டு இயங்குபவன் நான் அல்ல.
தற்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முஸ்லிம் கூட்டமைப்பொன்று உருவாக்க வேண்டும் என்ற கோஷம் ஊடகங்களில் எழுப்பப்படுகிறது. நாட்டில் புதிதாக அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவை. ஆனால் இக்கூட்டமைப்பின் நோக்கம் எமது உரிமைகளை வென்றடுப்பதாகவே இருக்கவேண்டும். இதைவிடுத்து ஒருகட்சியை பலவீனப்படுத்தி மற்ற கட்சியை வளர்க்க முனைந்தால் இது வெறும் கோஷமாகவே அமையும் எ்னறார்.
20 minute ago
27 minute ago
31 minute ago
38 minute ago
pma marzook Monday, 16 May 2016 04:00 PM
very grade message to the people.you are the leader in the Trinomalee district.congratulations for you.
Reply : 0 0
pma marzook Monday, 16 May 2016 04:01 PM
very grade message to the people.you are the leader in the Trincomalee district.congratulations for you.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
27 minute ago
31 minute ago
38 minute ago