2025 மே 19, திங்கட்கிழமை

நாமல்வத்தை பிரதான வீதியை புனரமைக்கும் பணி

Thipaan   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தின் மொறவௌ பிரதேச சபைக்குட்பட்ட நாமல்வத்தை கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதி, பல வருடகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்பட்ட நிலையில், அவ்வீதியை சிரமதான அடிப்படையில் புனரமைக்கும் பணி இன்று புதன்கிழமை (24) ஆரம்பமானது.

நாமல்வத்தை, அவ்வை நகர் மக்கள், கிராமத்திலுள்ள சங்கங்களின் ஊடாக மொறவௌ பிரதேச சபையின் செயலாளர் ஜூட் ராஜசிங்கத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து பிரதேச சபையின் முயற்சியினால் இச்சிரமதான பணி நடைபெற்றது.

இவ்வீதியினால் கர்ப்பிணிகளைக்கூட அவசரமாகக் கொண்டு செல்லாத நிலையில் காணப்பட்ட இவ்வீதியினை விமானப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் சிவில் சமூக அங்கத்தவர்கள் என, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன், எதிர்வரும் சனிக்கிழமையும் இச்சிரமதான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் ஜூட் ராஜசிங்கம் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X