Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எச்.ஏ.ஹுஸைன், நடராஜன் ஹரன்,வடமலை ராஜ்குமாா்,பொன்ஆனந்தம்,பேரின்பராஜா சபேஷ்,எப்.முபாரக்,எம்.எஸ்.எம்.ஹனீபா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,நல்லதம்பி நித்தியானந்தன்,பைஷல் இஸ்மாயில்
நடப்பு ஆட்சிக் காலப்பகுதிக்குள் கிழக்கு மாகாணசபையின் கீழுள்ள அனைத்து ஆளணி வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் வருமானப் பரிசோதகர்களுக்கான நியமனங்கள் 29 பேருக்கும் ஆய்வு உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள் 09 பேருக்கும் கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனங்கள்; 12 பேருக்கும் மாகாணசபையின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'கிழக்கு மாகாணசபையின் கீழுள்ள அனைத்து வெற்றிடங்களையும் எதிர்வரும் 04 மாதங்களுக்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாகாணசபை ஆட்சியாளர்கள், நிர்வாகத்தில் முறையாகக் கவனம் செலுத்தாமையாலேயே இந்தளவுக்கு அதிக வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை தமக்கு சுமக்க வேண்டி ஏற்பட்ட போதிலும், மக்களுக்காக எவ்வாறான நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார்' என்றார்.
'மேலும், கடந்த காலத்தில் அரசாங்க நியமனங்களுக்காக பரீட்சைகளை நடத்திவிட்டு வருடக்கணக்கில் அவர்களை காத்திருக்க வைக்கும் அரசியல் கலாசாரத்தை ஒழித்து, பரீட்சைகள் முடிந்ததும் விரைவில் தொழில்களில் அவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
நியமனங்களுக்காக விண்ணப்பிக்கக் கோரும்போது, தங்களுக்கு விருப்பமான தொழிலுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் சிலர் எவ்வித தேவையும் இன்றி விண்ணப்பிப்பதன் ஊடாகவே பரீட்சைகளை நடத்த வேண்டியுள்ளன.
அத்துடன், தற்போது உள்ளூராட்சிமன்றங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும் முதலமைச்சர்களின் கண்காணிப்பின் கீழேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதால் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட சகல நடவடிக்கைகளையும் உரிய வகையில் அமுல்படுத்தவுள்ளேன்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago