2025 ஜூலை 24, வியாழக்கிழமை

போக்குவரத்து தொடர்பாக விழிப்புணர்வு

Princiya Dixci   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் உப்புவெளிப் போக்குவரத்துப் பொலிஸாரும் அனுராதபுரச் சந்தியிலுள்ள விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களும் இணைந்து, இன்று புதன்கிழமை (23) காலை, போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியதுடன், சாரதிகளைத் தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி வைத்தனர்.

உப்புவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ஏ.ஜானக ஜெயரட்ண தலைமையில் நடைஇபற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில்,  உப்புவெளிப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதில் பாடசாலை மாணவர்கள், வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி, சாரதிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .