George / 2016 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
கல்ஓயா பிரதேசத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர்.
திருகோணமலையிலுள்ள படை முகாமில் கடமையாற்றும் 38 வயதுடைய இராணுவ சிப்பாயே இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் பொலிஸ் அருகில் அமர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
துன்புறுத்தலையடுத்து, பஸ் நேராக பொலிஸ் நிலையம் நோக்கி செலுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளையடுத்து இராணுவ சிப்பாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், இராணுவ சிப்பாயை நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago