Princiya Dixci / 2016 மே 12 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலைப் பிரதேசத்தில் போதை மாத்திரைகளை மூன்றினை தம்வசம் வைத்திருந்த நபரொருவரை, 01 இலட்சம் ரூபாய் சரீரப்பிணைக்கு இருவர் கையொப்பம் இடும்வரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பெர்ணாண்டோ, நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.
திருகோணமலை நான்காம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர், திருகோணமலை நான்காம் கட்டைப் பகுதியிலிருந்து திருகோணமலை நகருக்குச் செல்ல முற்பட்ட வேளை திருகோணமலை குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) கைதுசெய்து அன்றைய தினமே திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே மேற்கண்டவாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபருக்கெதிராக ஹெரோய்ன் மற்றும் கஞ்சா வைத்திருந்தமை போன்ற வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றிய விசாரணைகளை திருகோணமலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago