2026 மார்ச் 21, சனிக்கிழமை

புறா பிடிக்கச் சென்றவர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, குட்டிக்கராச்சி இஹ்ஸானிய்யா மகளிர் வித்தியாலயத்தில் இளைஞர் ஒருவர், திங்கட்கிழமை (29) இரவு 11.30 க்கு உயிரிழந்துள்ளதாகக் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர், கிண்ணியா இடிமன் பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இர்ஷாத் (வயது 26) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலைக்குள் புறா பிடிப்பதற்காக மூன்று பேர் சென்ற போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சடலம், கிண்ணியா பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X