2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

போலி முகவர் நிலையம் நடத்தியவருக்கு பிணை

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

வெளிநாடு செல்வதற்கான போலி முகவர் நிலையமொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் நபரை  நேற்று கந்தளாய் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் போலி முகவர் நிலையம் இயங்கிவருவதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே, குறித்த நபர் கைது செய்யப்பட்டு தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

இச்சந்தேக நபரிடமிருந்து 3 கடவுச்சீட்டுகள், வீஸா தொடர்பான போலி ஆவணங்கள், போலி வைத்திய அறிக்கை ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X