Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 14 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை-மொறவௌ பகுதியில் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை , திரியாய் சந்திக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தெவனிபியவர விகாரையின் விகாராதிபதி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மொறவௌ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இதனை அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையம், மக்கள் நடமாட்டம் இல்லாத இடமெனவும் காட்டு யானைகள் நடமாடும் இடமெனவும் தெரிவித்த விகாராதிபதி, பொலிஸார் மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் இதன் போது இவர் தெரிவித்தார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை ஹொரவபொத்தான-திருகோணமலை பிரதான வீதியிலுள்ள திரியாய் சந்தியில் அமைக்க சிவில் பாதுகாப்பு குழுவின் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பற்றி கடிதமொன்றினை அனுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் முக்கியஸ்தர்கள், மதப்பெரியார்கள், கிராம உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .