Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெருகல் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களில் ஒரு மீனவரைக் காணவில்லையெனவும் அம்மீனவரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார்,
காணாமல் போன மீனவர் வெருகல் - இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பரமானந்தம் (28 வயது) எனவும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தனது ஏழு நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றபோது படகு இயந்திர கோளாறு காரணமாக கவிழ்ந்ததாகவும், இதனையடுத்து ஆறு மீனவர்களும் நீந்தி கடற்கரையை வந்தடைந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது .
காணாமல் போன மீனவர் திருமணம் செய்து மூன்று மாதங்கள் கடந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், மீனவரை தேடும் பணியில் பிரதேச மக்களும் கடற்படையினரும் தேடுதல்களை நடாத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago