2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முக்கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கிளிக்குஞ்சுமலைப் பகுதியில் 02  பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 36 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் டிசெம்பர்; மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வந்த பெர்ணான்டோ, நேற்றுத் திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 13ஆம் திகதி காலை புதையலுக்காக பலி கொடுக்கும் வகையில் தனது 11 வயது மற்றும் 08 வயது பெண் பிள்ளைகளையும் கொலை செய்ததாகவும் இதை அவரது மனைவி விரும்பாததால் அவரையும் கொலை செய்ததாகவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X