Niroshini / 2016 மே 16 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் இருந்து முள்ளிப்பொத்தானைக்கு அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை பிணைத்து கொண்டு சென்ற இருவரை இம்மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் ருவான் திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கந்தளாய், முள்ளிப்பொத்தானைப் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு கந்தளாய் சீனித்தொழிற்சாலை பகுதியிலிருந்து கந்தளாய் முள்ளிப்பொத்தானை பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி இரண்டு மாடுகளை இணைத்து கொண்டு சென்றபோதே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை பொலிஸார் இன்று (16) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை தம்பலகமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago