2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் நால்வர் காயம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை நகர்ப் பகுதியிலுள்ள பிரதான வீதி முற்சந்தியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (21) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், திருகோணமலை, முருகன் கோயிலடி பாலையூற்று பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நிமால் ரஞ்சன் கீதா (39 வயது), அவரது மகளான நிவிசாலி (08 வயது), சகோதரியான பாஸ்கரன் மாலனி (40 வயது), மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலை, உப்புவெளி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் பிரியதர்ஷனி (21வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்துக்;குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X