2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முதிரை மரக்குற்றிகள் ஐந்துடன் ஒருவர் கைது

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகள் ஐந்தினை முச்சக்கரவண்டியொன்றில் கொண்டு சென்ற ஒருவரை நேற்று புதன்கிழமை (21) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், 93ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் நகரிலிருந்து முள்ளிப்பொத்தானைக்கு ஐந்து முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற போது, போக்குவரத்துப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு, முதிரை மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை, இன்று வியாழக்கிழமை (22) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்; தெரிவித்தனர்.                  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X