Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, புல்மோட்டை- சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த மருமகன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாமியாரைக் கைது செய்துள்ளதாகவும் புல்மோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கத்தி வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.சத்தியசீலன் (31 வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்தநபரின் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், நேற்றிரவு (27) மதுபோதையில் வந்த அவர், மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது, கோபம் கொண்ட மாமியார் கத்தியால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தி வெட்டுக்கு இலக்கான மருமகன் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025