2025 மே 19, திங்கட்கிழமை

மிரிஸ்வெவயில் பள்ளிவாசல் திறப்பு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை-புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள மீள்குடியேற்றக் கிராமமான மிரிஸ்வெவ கிராமத்தில், சீ.டி.சீ நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பள்ளிவாசல், அந்நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அஸ்ஷேஹ் அமீனினால், நேற்று (20)   திறந்து வைக்கப்பட்டது.

மிரிஸ்வெவ கிராம மக்கள் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக 01 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள ரொட்டவௌ கிராமத்துக்குச் சென்று வருவதாக, சீ.டி.சீ நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

மக்களின் நலன் கருதியும் சிறார்களின் மார்க்க அறிவையும் மேம்படுத்துவதற்காகவே இப்பள்ளி வாசல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவ்வமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X