2026 மார்ச் 21, சனிக்கிழமை

மகனை வல்லுறவுக்கு அழைத்த இளைஞனைத் தாக்கிய தந்தைக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தனது மகனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதற்கு அழைத்த இளைஞரை பொல்லால் தாக்கிய தந்தையை, அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) உத்தரவிட்டார்.

சோமாவதி, மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரின் எட்டு வயதுடைய மகன் ஒருவனை அப்பிரதேசத்தில் உள்ள பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதற்கு அழைத்துள்ளார்.

இவ்விடயத்தை, குறித்த சிறுவன் தனது தந்தையிடம் தெரிவித்ததையடுத்து ஆத்திரம் அடைந்த அவர், குறித்த இளைஞனை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

சந்தேகநபரை சனிக்கிழமை (27) மாலையில் கைது செய்த பொலிஸார், அவரை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X