Janu / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையொன்றுக்குள் இரு குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில் 45, 47, 37 வயதுடைய மூவர் காயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய 20, 25 வயதுடைய இருவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சிலரை தேடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீத்

03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026