Editorial / 2019 மார்ச் 22 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - ஹொரவப்பொத்தான பிரதான வீதியின், மஹாதிவுல்வெவ பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கற்பிட்டி - கந்தகுலிய, குறிஞ்சாம்பிடிய பகுதியைச் சேர்ந்த தனுஸ்க மதுரங்க (20 வயது) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரது தந்தையான அன்டனி எலிஸ் ரொஷான் என்பவரே, படுகாயமடைந்துள்ளார்.
கற்பிட்டியிலிருந்து திருகோணமலை நோக்கி, மீன் எடுப்பதற்காக, டிப்பர் லொறியில் சென்றுகொண்டிருந்த போது, அதன் பின்னால் பயணித்த பட்டா ரக லொறியொன்று மோதியதை அடுத்தே, விபத்து சம்பவித்ததாக, மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
8 minute ago
12 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago