2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-மட்கோ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவ்விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக  தெரிவித்தனர்.

 

இவ்வாறு விபத்தில்  உயிரிழந்த இளைஞன், திருகோணமலை-மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த சங்கல்ப ஐயசூரிய (26வயது) எனவும் தெரிவித்த பொலிஸார், அவரது சக நண்பர் படுகாயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், படுகாயமடைந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சஜித் டில்சான் (23 வயது) எனவும்  தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது - இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடலுக்குச் சென்றுகுறித்த  தினம் வீடு திரும்பி சக நண்பர்களுடன் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு   மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .