2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி வயோதிப பெண் பலி

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 21 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், பதுர்தீன் சியானா, எம்.என்.எம்.புஹாரி, பொன் ஆனந்தம், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு -தங்கபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை (21) காலை 05 மணியளவில், காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண், அதே இடத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி (வயது 64) எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், மீன் வாங்கிக் கொண்டு வரும் வழியில் விளா மரம் ஒன்றுக்கு அருகில் விளாம்பழம் விழுந்து கிடப்பதை கண்டு அதனை எடுக்கச்சென்ற போது, அவ் மரத்துக்குப் பக்கத்தில் நின்றிருந்த  யானையே இப்பெண்ணைத் தாக்கியுள்ளது.

சடலம், சம்பவ இடத்தில் உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X