2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதல்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

கந்தளாயில் ரயில் மீது இனந்தெரியாதோரால்  மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் ரயில் இஞ்சின் பகுதியிலுள்ள கண்ணாடி மற்றும் ரயில்  பெட்டிகளின் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளதாகப்   பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து புறப்படும் இரவு வேளைக் கடுகதி ரயில், கந்தளாய் ரயில் நிலையத்தில் தரித்துச் செல்வது வழமையாகும். அவ்வாறே,  ஞாயிற்றுக்கிழமை (5) இரவு தரித்துநின்ற ரயில் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்; என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .