Suganthini Ratnam / 2016 மே 16 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளில் 87 குடும்பங்களைச்; சேர்ந்த 426 பேர், வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக பாதிக்கப்பட்டதாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜே.சிறிபதி தெரிவித்தார்.
கடந்த சனி (14), ஞாயிறு (15) ஆகிய தினங்களில் காற்றுடன் கூடிய அடை மழை பெய்தது.
இதன் காரணமாக ஆறு வீடுகளில் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தம்பலகாமம், மார்க்கைத்திடல், முல்லியடி, கள்ளிமேடு, நடுப்பிரப்பந்தல் ஆகிய கிராமங்களிலுள்ள வீடுகளிலேயே வெள்ள நீர் புகுந்துள்ளது.
கந்தளாய் குளத்துக்கு கீழே உள்ள விவசாய நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
19 minute ago