Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில், மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் சென்ற மருத்துவமாது உயிரிழந்துள்ளார் என, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை (23) 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர், ஈச்சிலம்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தான லக்ஸ்மி (வயது 46) எனத் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வான் சாரதியைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
32 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
59 minute ago
1 hours ago