Thipaan / 2016 ஜூன் 20 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரால்குழி பாலத்துக்கருகில் மே மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்ல அனுமதித்த மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான், அவருக்கு 15,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
இரால்குழி பாலத்தருகில் மே மாதம் 25ஆம் திகதி, முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது பஸ்ஸினால் மோதியதில், மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவரை, இன்று திங்கட்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
19 minute ago