2025 ஜூலை 24, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 நவம்பர் 23 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - என்.சீ வீதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஏ.ஆர்.அணஸ் என்பவர் பலியாகியுள்ளதாக, திருகோணமலைத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை (23) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், படுகாயமடைந்த இந்நபரைத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், முச்சக்கர வண்டியில், திருகோணமலை என்.சீ வீதியினூடாக, மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போதே, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி லொறியுடன் மோதுண்டதாக, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .