Thipaan / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் பகுதியில் சட்டவிரோதமாக 750 மில்லி லீற்றர் வடிசாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (22) கைது செய்யப்பட்ட நபரை, பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
38 வயதான குறித்தநபர், வடிசாராயம் வைத்திருப்பதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவரின் வீட்டைச் சோதனைக்குட்படுத்திய போது, மேற்படி வடிசாராயப் போத்தல்களைக் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago